திருமலை ஏழுமலையான் கோயில்... நாளை நவம்பர் மாத தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்குத் தேவஸ்தானத்தின் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்களது தரிசன டிக்கெட்டுகளை உரிய நேரத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் இன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியாகின்றன. இதேபோல் நவம்பர் மாதத்திற்கான வாடகை அறை ஒதுக்கீடும் நாளை மாலை 3 மணிக்குத் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பக்தர்கள் அனைவரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த முன்பதிவு தொடங்கும் நேரத்தில் ஆன்லைனில் அதிகப்படியான நபர்கள் இணைய வாய்ப்புள்ளதால், பக்தர்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்து கொள்ளலாம்.
