3 வயது சிறுவனைக் கட்டிவைத்து தாக்கிய ஆசிரியை பணிநீக்கம்... அதிரடி உத்தரவு!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், 3 வயது சிறுவனைக் கைகளைக் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் பள்ளி உதவியாளர் ஆகிய இருவரையும் நிர்வாகம் உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.

பள்ளியில் படிக்கும் பிஞ்சுக் குழந்தையிடம் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கிடையே, சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.3 வயது சிறுவனைத் தாக்கியதாக எழுந்த புகார் தொடர்பாக கல்வித்துறை விசாரணை தொடங்க உள்ளதால், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
