திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை: சர்ச்சைக்கு மத்தியில் பாஜக அலுவலகத்தில் புதிய சிலை!

 
திருவள்ளுவர்

 

சென்னை போரூரில் நேற்று (அக். 11) பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது, திருவள்ளுவர் சிலைக்கு பாஜகவினர் காவி உடை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் புதிதாக காவி நிறத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிலைக்கு காவி உடை அணிவித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், இந்தப் புதிய சிலையும் கவனம் பெற்றுள்ளது.

திருவள்ளுவரின் அடையாளம் மற்றும் அவருக்கு அணிவிக்கப்படும் உடையின் நிறம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கமலாலயத்தில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.