2 கார்கள் நேருக்கு நேர் மோதல்... தலைகீழாக கவிழ்ந்த கார்! 19 வயது பெண் படுகாயம்!

 
kaar

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரு கார் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் 19 வயது இளம்பெண் படுகாயமடைந்தார்.

திருவனந்தபுரத்தில் சாலையில் 2 கார்கள் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதலின் வேகத்தில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த காரில் பயணம் செய்த 19 வயது இளம்பெண் படுகாயமடைந்தார். விபத்தை பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புப் படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தலைகீழாக கவிழ்ந்த காரில் சிக்கியிருந்த 19 வயது இளம்பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.