திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று பக்தர்களுக்கு மலையேற அனுமதியில்லை!

 
திருவண்ணாமலை
 

திருவண்ணாமலையில் நாளை மறுதினம் டிசம்பர் 13ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்ட உள்ள நிலையில், அன்றைய தினம் மலையேறிச் சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திக தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள். 

திருவண்ணாமலை தீபம்

இந்த வருடத்திற்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மறுதினம் டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் சன்னதியில் பரணி தீபமும் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலையேறிச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை தீபம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த நிலயில், மீண்டும் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தந்துள்ளதால், பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!