நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... அதே இடத்தில் மீண்டும் நிலச்சரிவு... கொட்டும் மழையில் உயிரைக் கையில் பிடித்த படி ஓடும் பொதுமக்கள்!
தமிழகத்தில் ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பரம், மலையடிவாரம், வ.உ.சி. நகரில், தொடர் கனமழை பெய்தது. இதனையடுத்து இப்பகுதியில் உள்ள 3 வீடுகள் பூமிக்குள் புதைந்துள்ளன. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று உருளும் நிலையில் உள்ளதால், மீட்புப் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Thiruvannamalai pic.twitter.com/96Dn4Yzevt
— Karthik Ravivarma (@Karthikravivarm) December 2, 2024
மேலும், அந்த வீடுகளில் சிக்கிய 5 குழந்தைகள் உட்பட 7 பேரின் நிலை என்ன என்று தெரியவிலை. இந்நிலையில், மீட்பு நடைபெற்று வரும் சூழலில், மீண்டும் அதே இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணிகள் தாமதமாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மண் சரிவு ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை வ.உ.சி நகரில் மலையடிவாரத்தில் மண் சரிவு! #CycloneFengal #CycloneFengalAlert pic.twitter.com/5AiP6Dgzgj
— காளி✩⍣ (@kali15061996) December 2, 2024
அதில், அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, மலைப்பகுதியில் இருந்து ஓடிச்செல்வதையும் இந்த வீடியோவில் காணமுடிகிறது. இந்நிலையில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்த இடத்தில் மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் ” 59 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் அதிக மழை பெய்துள்ளது. பாறைகள் சரிந்ததை தொடர்ந்து, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் குழு வர உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
