திடீர் மின்வெட்டு... கும்மிருட்டில் டார்ச் லைட் வெளிச்சத்தில் கிரிவலம் சென்ற பக்தர்கள்!

 
திருவண்ணாமலை திருவண்ணாமலை

 திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், கோடை விடுமுறை காலம் என்பதாலும் கோவிலிலும்   பாதையிலும் வழக்கத்தை விடப் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, இரவில்  நடக்கத் தொடங்கினர்.

திருவண்ணாமலை கிரிவலம் பெளர்ணமி

அப்போது எதிர்பாராத விதமாக திருவண்ணாமலையில் நேற்று இரவு திடீரென பயங்கர மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த   பாதையும் கும்மிருட்டில் மூழ்கியதோடு, பல இடங்களில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மின்சார விநியோகம் தடைபட்டதால், கிரிவலம் சென்ற பக்தர்கள் வேறு வழியின்றித் தங்களது மொபைல் போன்களில் உள்ள டார்ச் லைட் வெளிச்சத்தை ஆன் செய்து, அதன் துணையுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை இருளிலேயே நடந்து சென்றனர்.

கோடை விடுமுறை என்பதால் இந்தப் பாதையில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில், இந்த திடீர் மின் வெட்டால் எதிரே யார் வருகிறார்கள் என்பதே தெரியாமல் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். மேலும், இருட்டில் வழி தெரியாமல் தடுமாறிய குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஒருவித அச்சத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்தனர். திருவண்ணாமலையில் நிலவிய இந்த திடீர் மின்தடையால் ஆன்மிகப் பயணமாக வந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.