போக்சோ வழக்கின் சாட்சி 17 வயது சிறுவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை... திருவாரூரில் சோகம்!

 
போக்சோ நீதிமன்றம்

திருவாரூர் அருகே, போக்சோ உள்ளிட்ட வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுவன், 12-ம் வகுப்புப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் பள்ளியில் படித்தபோது உடன் படித்த சில நண்பர்கள் போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ளனர். இந்த வழக்கு சிறுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஆம்புலன்ஸ்

இந்த வழக்கில் சிறுவன் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்ததாகவும், இதற்காக கடந்த சில நாட்களாக அவர் அடிக்கடி நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்த நிலையில், திருத்துறைப்பூண்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட கொற்கை பசும்பண்ணை திடல் பகுதியில் சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிறுவனின் தந்தையிடம் புகார் பெற்ற போலீசார், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.