மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலியான குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி... முதல்வர் அறிவிப்பு!

 
விஜய்

 

திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை, மகனின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யன் (21), அவரது தந்தை ராஜா (49) ஆகியோர் கடந்த அக்டோபர் 5-ம் தேதி விவசாயக் கூலி வேலைக்காக நஞ்சை நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் உயர் அழுத்த மின்பாதை மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி டிராக்டர் மீது விழுந்ததால், டிராக்டரை ஓட்டிய ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தை ராஜா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.