இன்று மாலை உடல் நல்லடக்கம் - கொளத்தூர் MLA பாபுவின் உடலுக்கு தலைவர்கள், தொண்டர்கள் இறுதியஞ்சலி!
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான வி.எஸ். பாபு (75), உடல்நலக் குறைவு மற்றும் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது உடல் இன்று மாலை 4 மணிக்குப் பல்லவன் சாலை இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
75 வயதான கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவின் தீவிரக் கண்காணிப்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மறைந்த எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல், அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் தொகுதி பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காகப் பெரம்பூரில் உள்ள தனியார் விளையாட்டுத் திடலில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்குச் சென்னை பல்லவன் சாலை இடுகாட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மூத்த மக்கள் பிரதிநிதியான வி.எஸ். பாபுவின் மறைவு கொளத்தூர் தொகுதி மக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
