“இது தமிழ்நாட்டை கொள்ளையடிக்க அமைந்த ஆட்சி” - ஸ்டாலின் கடும் விமர்சனம்!

 
ஸ்டாலின்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காணொளி வாயிலாகப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு மற்றும் முதலமைச்சரின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மதுராந்தகம் தொகுதி வளர்ச்சிக்காக உண்மையாகப் பணியாற்றும் வழக்கறிஞர் இ.பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தவெக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்வதற்காக அமையவில்லை என்றும், இது "மாஃபியா கும்பல்கள் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க அமைந்த ஆட்சி" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மதுராந்தகம் ஐ பரந்தாமன்

விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர், ஜோசியரின் ஆலோசனையைக் கேட்டு ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகவும், விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்களைப் பொருட்படுத்தாமல் லண்டன் சென்று கார் ரேஸ் பார்ப்பதாகவும் விமர்சித்தார்.

மாநிலத்தில் தொடர் கொலைகள் நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் 'சிங்கப்பெண்கள் படை' என்று ரீல்ஸ் மட்டுமே போடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசின் கவனமெல்லாம் ஆட்சியைத் காப்பாற்றிக் கொள்ள எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்குவதில்தான் உள்ளது என்று கடுமையாகத் தாக்கினார்.