இதே ரூட் தான்.. அதிரடி காட்டிய போலீசார்... சிக்கிய 2,080 கிலோ ரேஷன் அரிசி

 
ரேஷன் அரிசி

லாரியில் கடத்தப்பட்ட 2,080 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை மண்டல எஸ்.பி. சினேகப்ரியா உத்தரவில் ராமநாதபுரம் மாவட்ட குடிமைப்பொருள் புலனாய்வு துறை எஸ்.ஐ., சிவஞான பாண்டியன், ஏட்டுகள் குமாரசாமி உள்ளிட்ட குழுவினர் ஆர்.எஸ்.மங்கலம் கருமொழி செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வந்தனர். 

ரேஷன் அரிசி

இந்த நிலையில், சந்தேகப்படும்படி வந்த லாரியை சோதனை செய்தபோது, அதில் ரேசன் அரிசி கொண்டுச்செல்லப்பட்டது தெரியவந்தது. பின்னர் லாரியை சோதனை செய்தபோது, 40 கிலோ ரேஷன் அரிசி கொண்ட 52 பிளாஸ்டிக் பைகள் சிக்கின. இதனையடுத்து 2080 கிலோ ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்தனர். இவைஆர்.எஸ்.மங்களம் பகுதியில் முறைகேடாக சேகரித்து காரைக்குடிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

ரேஷன் அரிசி

இது தொடர்பாக கடலாடி தாலுகா புனவாசல் பகுதியை சேர்ந்த மதி (21), லாரி உரிமையாளரானடிரைவர் செந்தில்குமார் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

From around the web