ஜி-பே பணம் கொடுத்ததில் தகராறு... பால் பண்ணை உரிமையாளர் குத்திக்கொலை !

 
தூத்துக்குடி

 

தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு அருகே, ஜி-பே பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பால் பண்ணை உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்புலன்ஸ்

கே.கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த நடேஸ்குமார் (44), அப்பகுதியில் பால் பண்ணை நடத்தி வந்தார். நேற்று இரவு அங்குள்ள கடை அருகே அவர் நின்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

புதியம்புத்தூர் அருகே புதுப்பச்சேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் மகாராஜன் (35), மளிகைக் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு ஜி-பே மூலம் பணம் அனுப்பியுள்ளார். ஆனால், அவர் குறைவாகப் பணம் செலுத்தியதால் கடைக்காரருக்கும் மகாராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதனை நடேஸ்குமார் தடுக்க முயன்றுள்ளார். அப்போது மகாராஜனை அவர் கையால் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன், நடேஸ்குமாரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து மகாராஜனை கைது செய்த போலீசார், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர்.