தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் புகழ்பெற்ற மரச்சப்பர பவனி ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 14 (வெள்ளி - உள்ளூர் விடுமுறை), ஆகஸ்ட் 15 (சனி - சுதந்திர தின அரசு பொது விடுமுறை) மற்றும் ஆகஸ்ட் 16 (ஞாயிறு) எனத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஆகஸ்ட் 22-ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
