ஆகஸ்ட் 9 முதல் சீரான குடிநீர் விநியோகம் - தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!

 
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் விநியோகச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களைச் சரிசெய்யும் பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் குடிநீர் தேவைகளைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய நீராதாரங்கள், சுப்பையாபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் மேயர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பராமரிப்புப் பணிகள் அனைத்தும் விரைவாக முடிவடைய உள்ளதால், ஆகஸ்ட் 9 முதல் அனைத்து வார்டுகளுக்கும் தடையின்றிச் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.