தூத்துக்குடியில் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

விசாரணையின் அடிப்படையில் மாசிலாமணி, துரை மற்றும் செல்லதுரை ஆகிய 3 பேர் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம்-1ல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி தாண்டவம் தீர்ப்பு வழங்கினார்.அதில் மாசிலாமணி, துரை, செல்லதுரை ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து 3 பேருக்கும் தலா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இந்த கொலை வழக்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தண்டனை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.