மாயமான சிறுவன் 30 போலீசார் தேடிய நிலையில் வீட்டுக்குள்ளேயே தூங்கிக் கொண்டிருந்ததால் பரபரப்பு !
தூத்துக்குடி அருகே 7 வயது சிறுவன் காணாமல் போனதாகக் கிடைத்த தகவலால் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காணாமல் போனதாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். சிறுவனை விரைவாகக் கண்டுபிடிக்கும் நோக்கில் வீடுகள், தெருக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மறைவான பகுதியில் சிறுவன் தூங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுவனைப் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் சிறுவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவன் பாதுகாப்பாகக் கிடைத்ததால் குடும்பத்தினரும் நிம்மதியடைந்தனர்.
