Breaking... தூத்துக்குடியில் பட்டப்பகலில் பயங்கரம்... விசிக முன்னாள் நிர்வாகி வெட்டிக் கொலை!

 
தூத்துக்குடி

 

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி சோட்டையன் தோப்பைச் சேர்ந்தவர் பாலன். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.

வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்காக பேனர் கட்டும் பணியில் பாலன் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் பாலன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சண்முகபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வந்தபோது, அவரை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பாலன் உயிரிழந்தார்.

இந்தக் கொலைச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும், இதில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.