சோகம்: கணவரை ஜாமீனில் எடுக்க முடியாத மனவேதனையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!
தூத்துக்குடியில் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை ஜாமீனில் எடுக்க முடியாத மனவேதனையில் இளம்பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (22) கடந்த 7 மாதங்களாகச் சிறையில் உள்ள நிலையில், அவரது மனைவி திவ்யா (19) கணவரை ஜாமீனில் வெளியே எடுக்கப் பலமுறை முயன்றும் முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடும் மனவேதனையில் இருந்த திவ்யா, தனது மாமியார் நாகம்மாள் வீட்டில் இருந்தபோது, தனது 7 மாத ஆண் குழந்தையை வீட்டு வாசலில் வைத்துவிட்டு உள்ளே சென்று கதவைப் பூட்டிக் கொண்டுள்ளார். பின்னர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், இது குறித்துக் காவல்துறையினரும் சார் ஆட்சியரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
