70 வயதைக் கடந்தவர்களுக்கும் திமுகவில் பதவி வழங்கப்படும்: ஆர்.எஸ். பாரதி பேச்சு!

 
ஆர்.எஸ். பாரதி

திமுகவில் 70 வயதைக் கடந்த மூத்த நிர்வாகிகளையும் கட்சிக்காக உழைத்த முன்னோடிகளையும் கட்சி ஒருபோதும் ஒதுக்கிவிடாது என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

மூத்த நிர்வாகிகளின் நீண்டகால உழைப்பு மற்றும் கள அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தகுந்த முக்கியப் பொறுப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

இளைஞர்களுக்குக் கட்சியில் அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கும், வரவிருக்கும் தேர்தல்களைச் சிறப்பாக எதிர்கொள்வதற்கும் ஏற்ப உட்கட்சி விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.