பெண் அதிகாரிக்கு மிரட்டல்.. திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவு.. பிடிக்க தனிப்படை அமைப்பு!

 
வசந்தம் கார்த்திகேயன்

பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரைக் கைது செய்வதற்காக தியாகதுருகம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்

பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவாகியுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அவரைத் தேடிக் கைது செய்வதற்காகத் தியாகதுருகம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

காவல்துறையின் கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் வகையில், முன்ஜாமீன் கோரி வசந்தம் கார்த்திகேயன் தரப்பில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை குறித்த எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் எழுந்துள்ளது.