இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டல்... 15 சவரன் நகைக் கொள்ளை !

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை மத்திய, மாநில அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் அருள்முருகன். இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி 32 வயது அன்னலட்சுமி. நேற்று பிற்பகல் 3 மணிக்கு வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது, அங்கு முகத்தில் பிரவுன் நிறத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் வருகை தந்துள்ளனர்.
இதில் 2 பேர் வீட்டின் உள்ளே சென்றதாகவும், ஒருவர் வெளியில் நின்றதாகவும் தெரிகிறது. இதனால் வீட்டுக்குள் சென்றவர்கள், திடீரென மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அன்னலட்சுமியை மிரட்டி நகைகளை பறித்தனர். அவர்கள் அன்னலட்சுமி அணிந்து இருந்த தங்கசங்கிலி, கம்மல் மற்றும் பீரோவில் இருந்த தங்க நகைகள் உட்பட மொத்தம் சுமார் 15 பவுன் தங்கநகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிரவிசாரணை நடத்தினர். இந்த காட்சிகள் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியிருந்தன. இதனைத்தொடர்ந்து போலீசார் 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!