ரூ.1 கோடி மாமூல் கேட்டு மிரட்டல்... பசும்பொன் மக்கள் கட்சித் தலைவர் இசக்கி ராஜா கைது!

 
பசும்பொன் மக்கள் கட்சித் தலைவர் இசக்கி ராஜா

தூத்துக்குடியில் பிரபல வணிக நிறுவன உரிமையாளரிடம் பெருந்தொகையைக் கேட்டு மிரட்டல் விடுத்ததாகப் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கி ராஜாவைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த வேலவன் ஹைப்பர் மார்க்கெட் மற்றும் ஜவுளிப் பூங்கா நிறுவனத்தின் உரிமையாளரிடம், பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கி ராஜா தரப்பினர் ரூ.1 கோடி மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

கடந்த 2023ம் ஆண்டு மேற்படி நிறுவனத்தில் வாங்கிய ஐந்து சவரன் தங்கம் போலியானது என்றும், அதில் வேறு உலோகங்கள் அதிகமாகக் கலக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இசக்கி ராஜா தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.

பழைய நகையைக் காரணம் காட்டி நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்ததுடன், பெருந்தொகையை மாமூலாகக் கேட்டதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இப்புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், பசும்பொன் மக்கள் தேசம் கட்சித் தலைவர் இசக்கி ராஜாவை அதிரடியாகக் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.