சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.. 3 விமானங்கள் அதிரடியாக ரத்து..!!

 
விமானங்கள் ரத்து

புயல் மற்றும் கனமழை காரணமாக மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. தற்போது 5 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் 'மிக்ஜம்' புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 310 கி.மீ தொலைவில் தென் கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

Cyclone Michaung Update: Heavy Rains, Gusty Winds Forecast for Chennai and  Nearby Districts | மிக்ஜாம் புயல்: 7 மாவட்டங்களில் மிக கனமழையோடு 70 கிமீ  வேகத்தில் தரைக்காற்று வீசும் ...

கனமழையால் மும்மை, ஹைதராபாத் செல்ல இருந்த 2 விமானங்களும், மும்பையில் இருந்து சென்னை வரவிருந்த ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் இருந்த புறப்படவிருந்த 9 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 

மிக்ஜாம் புயல் எதிரொலி: 3 விமானங்கள் ரத்து

இந்த வகையில் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆந்திரம், ஒடிஸா வழியாகச் செல்லும் 118 விரைவு ரயில்கள் டிச.3 முதல் டிச.7-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web