த்ரில் வெற்றி... உலகக்கோப்பை ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தி 4-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்!
Aug 31, 2026, 07:05 IST
பதினறாவது உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியைத் த்ரில்லாக வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியின் 44-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மைக்கேல் ஸ்ட்ரூதாப் கோலடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 4-வது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ள ஜெர்மனி அணி, ஹாக்கி வரலாற்றில் அதிக முறை பட்டம் வென்ற பாகிஸ்தானின் உலக சாதனையைச் சமன் செய்துள்ளது.
