வாவ்... தஹ் லைப்... லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த படக்குழு.!

 
தஹ் லைப்

 நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பான் இந்தியா படங்களில் ஒன்று தஹ் லைப்.  விக்ரம் படம்  வெளியாகி மிகப்பெரிய அளவில் அவருக்கு கை கொடுத்த  நிலையில் அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவர் கமிட்டாகி பிஸியாகி உள்ளார். தன்னுடைய நடிப்பு கமிட்மெண்ட்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவர் தவிர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் படப்பிடிப்புக்கள்  நிறைவடைந்து உள்ளதாக படக்குழு சார்பில்   அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே மாதம்  இந்த படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.  

தஹ் லைப்

நடிகர் கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் 30 ஆண்டுகளை கடந்து உருவாகி வரும் படம் தக் லைஃப். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டது.  படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், வையாபுரி உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு வளர்ப்பு மகனாக சிம்பு இணைந்துள்ளதாகவும் அவரது ஜோடியாக திரிஷா நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடி இல்லை எனவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் தற்போது ஒட்டுமொத்தமாக நிறைவடைந்து போஸ்ட் புரொடக்க்ஷன்ஸ்  பணிகள் நடைபெற்று வருகின்றனர்

தக் லைப்

 டப்பிங் பணிகளை கமல், சிம்பு ஆகியோர் பிசியாக உள்ளனர்.  இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் தற்போது 149.7 கோடி ரூபாய்களுக்கு கைமாறி உள்ளதாக தெரிகிறது. மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் உதயநிதி   இணைந்து தயாரித்துள்ள நிலையில் இந்த படம் மிகப்பெரிய மாஸ் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் கொடுத்தது. இந்நிலையில் அவரது அடுத்த படைப்பான தக் லைஃப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் என்ட்ரி ஆகி 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.  இதுவரை 233 படங்களில்  நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அன்பறிவு கூட்டணியில் தன்னுடைய 234 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web