ஆசிய பாரா விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கம்: துளசிமதிக்கு ரூ.1.75 கோடி ஊக்கத்தொகை!
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.75 கோடி ஊக்கத்தொகை கிடைக்கவுள்ளது.
ஜப்பானின் அயிச்சி-நகோயாவில் நடைபெறும் இப்போட்டியில், மகளிர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களையும், மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் துளசிமதி வென்றுள்ளார்.
தமிழக அரசின் ஊக்கத்தொகை அறிவிப்பின்படி, வெள்ளிப் பதக்கத்துக்கு தலா ரூ.50 லட்சமும், தங்கப் பதக்கத்துக்கு ரூ.75 லட்சமும் வழங்கப்படும். இதன்படி, மூன்று பதக்கங்களுக்காக அவருக்கு மொத்தம் ரூ.1.75 கோடி ஊக்கத்தொகை கிடைக்கவுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி, சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வருகிறார். ஆசிய பாரா விளையாட்டில் அவர் பெற்றுள்ள இந்த மூன்று பதக்கங்களும் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளன.
