தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!

 
மழை

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை மாணவி

தமிழகத்தில் இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், அதனை ஒட்டியுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை

குறிப்பிட்ட மாவட்டங்களைத் தவிர, ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.