இன்று தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களான சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கும் உரிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
