திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் பலி; 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன

 
திபெத்

 

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கம் கூகுள்

நாக்சு (Nagqu) நகருக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து சிறிய அளவிலான நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சேதமடைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ரெயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை சீன அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.