’டைகர் கா ஹூக்கும்'.. மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி.. சூப்பர் ஸ்டார் மோடி வீடியோ வைரல்!
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து பாஜக தலைமையிலான அணி வெற்றி உறுதி செய்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்தது. மகாயுதி (பாஜக ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி) மற்றும் மகா விகாஸ் அகாடி (காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா சரத் பவார் என்சிபி) இடையே கடும் போட்டி நிலவியது.
𝐒𝐮𝐩𝐞𝐫 𝐒𝐭𝐚𝐫 मोदी जी... pic.twitter.com/yU026sBxru
— BJP (@BJP4India) November 23, 2024
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கையின்படி, மகாராஷ்டிராவில் பாஜக (மகாயுதி) கூட்டணி 231 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில், ஜெயிலர் படத்தில் வரும் டைகர் க ஹூக்கும் என்ற ஹிந்தி பாடலைப் பயன்படுத்தி பிரதமர் மோடியை வைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோவை பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!