பகீர் வீடியோ... அரசு பேருந்தை ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை... அலறிய பயணிகள்!

 
காட்டு யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள புலிகள் காப்பகத்தில் பத்து புலிக்குட்டிகள் உள்ளன. இவற்றில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை என அனைத்து வனவிலங்குகளும் இக்காடுகளில் உள்ளன. வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், யானைகள் தண்ணீர் தேடி அலைகின்றன. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

இதுபோன்று அடிக்கடி நடந்து வரும் நிலையில், யானைகள் சாலைகளில் உலா வருகின்றன. அதில் வரக்கூடிய வாகனங்களை தடுத்து உணவு தேடி அலைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

யானை

முடியனூர் - நெய்தாலாபுரம் கிராமங்கள் அருகே காட்டுப்பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அரசுப் பேருந்து முன் வந்து காட்டு யானை துரத்தியது. யானை துரத்தியதால் பேருந்தை டிரைவர் பின்னோக்கி ஓட்டினார். காட்டு யானை சிறிது நேரம் துரத்தியது. பின்னர் அது காட்டுக்குள் சென்றது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறிது நேரம் அச்சமடைந்தனர். பின்னர். அரசு பஸ் டிரைவர் பஸ்சை ஓட்டினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web