திக் திக் நிமிடங்கள்... மருத்துவ மாணவர் விடுதியில் மோதியதில் மருத்துவர்களின் நிலை?

 
திக் திக் நிமிடங்கள்... மருத்துவ மாணவர் விடுதியில் மோதியதில் மருத்துவர்களின் நிலை?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம்  ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதிகளின் மேலே விழுந்து  தீப்பற்றி எரிந்தது.விண்ணை முட்டும் அளவுக்கு அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த கோர விமான விபத்தில்  168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்தனர்.  
விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக  கூறப்படுகிறது. இதுவரை 133 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  . 


குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி, மெகானி என்ற பகுதியில் இயங்கி வந்துள்ளது. இந்தக் கட்டடத்தின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், கட்டடத்தில் இருந்த சிலர் பலியானதாகவும், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.   விமானத்தில் விமானிகள், ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்த நிலையில், இதுவரை 130 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

திக் திக் நிமிடங்கள்... மருத்துவ மாணவர் விடுதியில் மோதியதில் மருத்துவர்களின் நிலை?

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு மேலெழும்பியது. விமானம் புறப்பட்ட வேகம் தொடரவில்லை.  விமானம் மேலெழும்ப முடியாமல் வளைந்து, வேகமாக கீழே இறங்கிவிட்டது.  சற்று வினாடிகளில்  விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த விமானம் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்த நிலையில், விமானம் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்ததும், விமானம் விழுந்த நேரத்தில், அந்தக் கட்டடம் முழுக்க தீப்பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவர்களின் விடுதி மீது விழுந்த விமானத்தால் விடுதி கட்டடத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. விமானம் கட்டடத்தின் மீது விழுந்தபோது, மருத்துவர்கள் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  மருத்துவ மாணவர் விடுதிக் கட்டடடப் பகுதியும் தீப்பிடித்து எரிவது பதிவான நிலையில், மருத்துவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.