’மீண்டும் அமலுக்கு வந்த டிக்டாக் செயலி’.. முக்கிய உத்தரவை பிறப்பித்த டிரம்ப்!

 
டிக் டாக்

'டிக் டாக்' என்ற மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமானது. இன்ஸ்டா ரீல்ஸின் முன்னோடி என்று டிக் டாக்கைக் கூறலாம். இது வயது வித்தியாசமின்றி பல்வேறு குழுக்களால் பயன்படுத்தப்படுகிறது. 'பைட்ஸ்' என்ற சீன நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 170 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். ஜோ பைடன் அரசாங்கம் சமீபத்தில் இந்த செயலியை தடை செய்தது.

டிக் டாக் பிரபலம் திவ்யா அதிரடி கைது!

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க காங்கிரசில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பாக, அந்த நிறுவனம் நேற்று அமெரிக்காவில் உள்ள டிக்டாக் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது. டிக்டாக் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. டிக்டாக் செயலி வழக்கம் போல் செயல்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.

டிரம்ப்

டிக்டாக் சேவையை தடை செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த நாட்டின் அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்ப், டிக்டாக் செயலி தடையிலிருந்து 90 நாள் விலக்கு அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளதால், 'டிக்டாக்' செயலி அமெரிக்காவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக, டிக்டாக் நிறுவனம், "டிக்டாக் சேவையை வழங்க தேவையான உத்தரவை பிறப்பித்த டொனால்ட் டிரம்பிற்கு நன்றி. நீண்டகால தீர்வுக்காக டிரம்புடன் இணைந்து பணியாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க

From around the web