விளைநில மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி!

 
திண்டிவனம்

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். அவரது உடலை ஏரியில் வீசியதாகக் கூறப்படும் விவசாயப் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாய நிலங்களில் மின்வேலி, சோலார் வேலி அமைக்க அனுமதி பெற வேண்டும்; அரசு சொல்வது என்ன? | The Tamil Nadu government announced the rules for setting up an electric fence... What is ...

மேல்சிவிரி கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் காட்டுப்பன்றிகளைத் தடுக்க சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு முயல், நண்டு பிடிக்கச் சென்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (37), மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.

மின்சார வேலி அமைப்பு, மின்சார வேலி கம்பி பாதுகாப்பு 2026

இதைக் கண்ட நிலத்தைப் பராமரித்து வந்த சங்கர் (56), போலீசாருக்குப் பயந்து உடலை அருகிலுள்ள ஆத்திப்பாக்கம் ஏரியில் வீசியதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நில உரிமையாளர் அழகேசன் மற்றும் சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சங்கர் கைது செய்யப்பட்டார். பச்சையப்பனுக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.