திருச்செந்தூர் யானை தாக்கிய விவகாரம்.. உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்!
திருச்செந்தூர் தெய்வானை யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ள நிலையில், பொது நிவாரண நிதி வழங்குவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 18-11-2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் அன்று யானையால் தாக்கப்பட்டனர். இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையும், மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி உதயகுமார் உயிரிழந்ததையும் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த உதயகுமார், சிசுபாலன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!