திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசன நேரத்தில் மாற்றம் - கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

 
திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரங்களில் மாற்றம் செய்து கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, கட்டண வரிசையில் செல்லும் பக்தர்கள் மாலை 6:30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இலவச பொதுத் தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் இரவு 7:00 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

திருச்செந்தூர் முருகன் முருகர்

விசேஷ தினங்கள், பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப இந்தத் தரிசன நேரங்களில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரே தலம் என்ற பெருமையைக் கொண்டது திருச்செந்தூர். சங்க இலக்கியங்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், சுமார் 2,000 முதல் 3,000 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் முருகர்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி மற்றும் பௌர்ணமி போன்ற சிறப்பு நாட்களில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, இரவு முழுவதும் கடற்கரையில் தங்கி அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகும். தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளதால், திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் நேரத்தைத் திட்டமிட்டுச் சென்று சுவாமி தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.