திருச்செந்தூர் கோயில் யானை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பராமரிக்கப்படும் தெய்வானை என்ற பெண் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் வனத் துறையினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.
யானை குடில் பகுதிக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யானை உடல்நலம், அதன் செயல்பாடுகள் குறித்து கண்காணித்த கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவர்கள், தற்போது யானை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகத் தெரிவித்தனர்.
இதனிடையே, பாகன்களின் கூறியபடி கால்களை அசைத்தல், திரும்புவது, துதிக்கையை தூக்கி காட்டுவது என அனைத்துக் கட்டளைகளையும் தெய்வானை யானை பின்பற்றி வருகிறது. திருச்செந்தூர் கால்நடை மருத்துவர்கள் பொன்ராஜ், அருண், பணியாளர்கள் கந்தசாமி, ஜிந்தா, வன அலுவலர் அருண் உள்ளிட்டோர் யானையை கண்காணித்து வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!