திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் ஆவணி தேரோட்டம்.., பக்தர்கள் ஆரவாரம்!
Aug 30, 2026, 15:30 IST
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோயில் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பக்தி பரவசத்துடன் விமரிசையாக நடைபெற்றுள்ளது.
ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வெயிலுகந்த அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தேரோட்டத்தை முன்னிட்டுத் தேரோடும் வீதிகளில் திரளான பக்தர்கள் 'அரோகரா' கோஷங்களுடன் கூடி நின்று வடம் பிடித்துத் தேரை இழுத்துச் சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவை முன்னிட்டுத் திருச்செந்தூர் காவல்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்புப் பணிகள், குடிநீர் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விதமான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
