அமைச்சர் பொன்முடிக்கு பதில் திமுக துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம்!

 
பொன்முடி திருச்சி சிவா


 
அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. அதன்படி  பாலியல் தொழிலாளி குறித்து மிகவும் ஆபாசமாக பேசியிருந்தது பெரும் கண்டனத்திற்குரியது . எப்படியாக இருந்தாலும் பெரும் தவறு தான் என கனிமொழி உட்பட பல்வேறு தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.  

ஸ்டாலின் பொன்முடி

அதாவது உடலுறவை பட்டை நாமம் என சைவ மற்றும் வைணவத்துடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  திமுக கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் எம்.பி கனிமொழி பெண்களை குறித்து இப்படி கொச்சையாக பேசுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கூறியிருந்தார்.  

பொன்முடி


இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை முதல்வர் ஸ்டாரின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்லார். அவருக்கு பதில்  திமுக துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே பெண்களின் இலவச பேருந்து பயணம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அமைச்சர் பொன்முடி உயர்கல்வித்துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரின் கட்சி பதவியை திமுக பறித்துள்ள நிலையில் அமைச்சர் பதவியையும் பறிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

From around the web