திருப்பதியில் அலிபிரி நடைபாதையில் புகைப்பிடித்தவர் மீது புகார் - திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில் தேவஸ்தான விதிமுறைகளை மீறிப் புகைப்பிடித்த நபர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலை புனிதப் பகுதியிலோ அல்லது அலிபிரி நடைபாதையிலோ பக்தர்கள் புகைப்பிடிக்கக் கூடாது என்பது தேவஸ்தானத்தின் முக்கியமான விதியாகும். இந்த நிலையில், அலிபிரி நடைபாதையில் நபர் ஒருவர் விதிமுறைகளுக்கு மாறாகப் புகைப்பிடித்ததாக தேவஸ்தான அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இச்சம்பவம் தொடர்பாகப் புகைப்பிடித்த நபர் மீது திருமலை 2-டவுன் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கத் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. திருமலையின் புனிதத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், தேவஸ்தான விதிமுறைகளை மீறிச் செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
