ஐப்பசி பௌர்ணமி: திருமலையில் கோலாகலமாக நடைபெற்ற கருடசேவை உற்சவம்!

 
திருப்பதி

 

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருமலை ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமி கருடசேவை உற்சவம் அக்.26-ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிலும் இந்த உற்சவம் நடைபெற்றது.

பிரம்மோற்சவம் திருப்பதி

திருமலையில் மலையப்ப சுவாமி தங்கக் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். தொடர்ந்து, கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

திருப்பதி பிரம்மோற்சவம்

இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, “கோவிந்தா... கோவிந்தா...” எனப் பக்தி முழக்கமிட்டனர். சுவாமியைத் தரிசித்து வழிபட்ட பக்தர்கள் அருள் பெற்றனர்.