நெல்லையில் கத்தரிக்காய் விலை ஒரே நாளில் ரூ.10 உயர்வு? கிலோ ரூ.100-ஐ தொட்டதால் அதிர்ச்சி!

 
கத்தரிக்காய்

 

நெல்லையில் கத்தரிக்காய் விலை கணிசமாக உயர்ந்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்துக்கு கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் வரத்து குறைந்ததால் தக்காளி, கேரட் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்தது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்ததால் அதன் விலை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், கத்தரிக்காய் வரத்து மிகவும் குறைந்ததால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கத்திரிக்காய்

கடந்த அக்டோபர் 29-ம் தேதி ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு விலை படிப்படியாக அதிகரித்து, அக்டோபர் 30-ம் தேதி ரூ.90-ஆக உயர்ந்தது.

கத்திரிக்காய்

தொடர்ந்து, அக்டோபர் 31-ம் தேதி நெல்லை உழவர் சந்தையில் வெள்ளை கத்தரிக்காய் கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட் மற்றும் சில்லறைக் கடைகளில் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

கத்தரிக்காய் விலை உயர்வால் அன்றாட சமையலுக்கான காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரத்து அதிகரித்தால் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.