உணவகத்தில் ஏற்பட்ட தகராறு விபரீதம்: கல்லால் தாக்கப்பட்ட 25 வயது இளைஞர் உயிரிழப்பு

 
கல்

 

திருநெல்வேலி டவுனில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ்

நெல்லை டவுன் ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது சலீமின் மகன் அப்துல் அஜீஸ் (25). கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி, நெல்லை டவுன் கூலக்கடை பஜாரில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, அருகிலிருந்த கடை முன்பு நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு உணவருந்த வந்த மூன்று பேருக்கும் அப்துல் அஜீஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அந்த மூவரும் சேர்ந்து அவரைத் தாக்கி கீழே தள்ளியதுடன், கற்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், நாராயணன் பிரகாஷ் (23), மகாராஜன் (26), விக்னேஷ் (26) ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், சிகிச்சையில் இருந்த அப்துல் அஜீஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.