செப்.15 முதல் திருப்பதியில் பிரம்மோற்சவத்திற்காக அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

 
பிரம்மோற்சவம் திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நடைபெறவுள்ள வருடாந்திரப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 15 முதல் 23 வரை 9 நாட்களுக்குச் சிறப்புத் தரிசனங்கள் மற்றும் ஆர்ஜித சேவைகளை ரத்து செய்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் 9 நாட்களும் வழக்கமாக நடைபெறக்கூடிய அனைத்து வகையான ஆர்ஜித சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி திருமலை

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு முன்னுரிமைத் தரிசனங்கள் இந்த நாட்களில் செயல்படாது.

திருப்பதி கார்த்திகை திருவிழா

சாமானிய பக்தர்கள் அனைவரும் தடங்கலின்றி விரைவாக ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, திருமலைக்கு வரத் திட்டமிடும் பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.