இன்னும் விடுமுறையே ஆரம்பிக்கலை... திருப்பதியில் மார்ச் மாத உண்டியல் காணிக்கை ₹118 கோடி!

 
திருப்பதி

இன்னும் 10வது, 12 வது பொதுத்தேர்வுகள் முடிந்து பல மாநிலங்களில் விடுமுறையே துவங்கவில்லை. அதற்குள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் மாத காணிக்கை மட்டுமே ரூ.118 கோடி என்கிற தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதியில் திருவிழா நாட்கள் என்றில்லாமல், வருடத்தின் 365 நாட்களுமே திருவிழாவாக தான் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளில் இருந்தும் குவிகிறார்கள். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களோடு உண்டியலில், பணம், வெள்ளி, தங்கம், வைரம், வெளிநாட்டு கரன்சிகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

திருப்பதி

அப்படி கடந்த மார்ச் மாதத்தில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.118 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் தினந்தோறும் எண்ணப்பட்டு, கோயில் வங்கி கணக்கில் தினமும் இருப்பு வைக்கப்படுகிறது. திருப்பதியில் தொடர்ந்து 25வது மாதமாக உண்டியல் காணிக்கைத் தொகை ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

From around the web