பட்டப்பகலில் பயங்கரம்: ஆண், பெண் இருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை!

 
திருப்பத்தூர்

 

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி பகுதியில் ஆண் மற்றும் பெண் இருவர் மர்மமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

ஒரே பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

மேலும், உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.