மனைவியிடம் முத்தம் கேட்டு தொந்தரவு செய்த போலீஸ் ஏட்டு! பெண் மாயமான விவகாரத்தில் பரபரப்பு

 
ஏட்டு

 

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரின் மனைவியிடம் தொடர்ந்து வீடியோ அழைப்புகள் செய்து தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் ஏட்டு ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே அந்தப் பெண் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை பலாத்காரம் மனைவி தகராறு தம்பதி சண்டை

மங்கலம் பகுதியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி திடீரென மாயமானார். இதுகுறித்து கணவர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஒரு நாளில் 30 முறைக்கு மேல் வீடியோ அழைப்பு?

விசாரணையில், மங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவர் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணைப் பெற்று தொடர்ந்து தொடர்பு கொண்டது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தினமும் வீடியோ அழைப்பில் பேசி முத்தம் கேட்டு வற்புறுத்தியதுடன், ஆபாசமாகப் பேசி தொந்தரவு அளித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு நாளில் 30 முறைக்கும் மேல் அழைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான ஏட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாயமான பெண் தொந்தரவு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.