ஏலகிரி சுற்றுலா முடிந்து திரும்பியபோது விபத்து! அமெரிக்கர்கள் இருவர் உட்பட 3 பேர் படுகாயம்

 
விபத்து

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் காரில் ஏலகிரி மலைக்குச் சென்றுவிட்டு திருவண்ணாமலை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மண்மலை அருகே வந்தபோது, எதிரே சென்ற ஆட்டோ மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரும், ஆட்டோ ஓட்டுநர் ஏழுமலையும் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் ஏழுமலை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரும் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.