தீபாவளி விடுமுறையில் ஏரியில் குளிக்கச் சென்ற 4 மாணவிகள் பலி; காப்பாற்ற முயன்ற பெண் ஊழியரும் உயிரிழப்பு!

 
ஏரி

 

திருவண்ணாமலையில் ஏரியில் குளிக்கச் சென்ற அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைக் காப்பாற்ற முயன்ற பெண் பாதுகாவலரும் உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சாலையில் அரசு பெண்கள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கிப் படித்து வந்த விஜயலட்சுமி, அல்லி, பூமிகா, வள்ளியம்மாள் ஆகிய 4 மாணவிகளும் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இன்று ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

அவர்களுடன் விடுதி மையத்தின் பெண் பாதுகாவலரான தேன்மொழியும் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 4 மாணவிகளும் ஏரியில் மூழ்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற தேன்மொழியும் நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது.

தகவலறிந்து வந்த மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடத்தி, 5 பேரின் உடல்களையும் ஏரியில் இருந்து மீட்டனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது